சனத் நிஷாந்த சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரு வாரங்களுக்கு சபை நடவக்கைகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்புக்கு  பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை  என்ன ?  என்று எதிர்கட்சித் தலைவர் 27- 2 கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை (21) எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஆளும் தரப்பினர் சபை நடுவில் வந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவரது பத்திரத்தை பறித்தொடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.