அரசியலமைப்பு சபையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை – சுமந்திரன்

அரசியலமைப்பு சபையில் 10 உறுப்பினர்களும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளமையை இன்று நாடாளுமன்றில் கவனத்திற்கு சுமந்திரன் கொண்டுவந்திருந்தார்.

அரசியலமைப்பு சபை உறுப்பினருக்க நாடா ளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திலும் கட்சித் தலைவர் கூட்டத்திலும் அதை சுட்டிக்காட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என கூறும் அரசாங்கம் இந்த விடயத்தில் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை குறித்து சுமந்திரன் ஆதங்கம் வெளியிட்டிருந்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.