இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை செயலாளரிடம் மன்னிப்புக் கோரினேன்! ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் ஜெய்ஷா குறித்து இலங்கையில் வெளியான கருத்துக்களுக்காக அவரிடம் மன்னிப்பு கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் இலங்கை கிரிக்கெட்டை நிர்வாகம் செய்கின்றார் எனத் தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை ஜனாதிபதியே இந்தக் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோருமளவிற்கு இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெஸ்;ட்போர்ஸ்டின் பல்கி சர்மாவிற்கு வழங்கிய விசேட பேட்டியில் இலங்கை ஜனாதிபதி ஷாவுடன் இது குறித்து பேச்சுகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஷா இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்கவில்லை. அவர்கள் ஷா இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு ஆதரவளிக்கின்றார் எனக் கருதுகின்றனர். நான் ஷாவுடன் பேசினேன். வேதனையை வெளியிட்டேன். அவருடைய பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோரினேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.