மாவீரர் வாரத்தை முன்னிட்டு கட்டப்பட்ட கொடிகள் அறுக்கப்பட்டன!

யாழில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு, கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த சிவப்பு – மஞ்சள் கொடிகள் இனம்தெரியாத நபர்களினால் அறுத்தெரியப்பட்டுள்ளன.

துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியில் இராணுவ முகாம் தற்போது காணப்படும் நிலையில், அருகில் உள்ள காணி மற்றும் வீதிகளில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

அதனை நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இனம் தெரியாத நபர்கள் அறுத்து சென்றுள்ளனர் என சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரான செ. மயூரன் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட கொடிகள் அறுக்கப்படவில்லை எனவும், தாம் கட்டிய கொடிகளை மட்டுமே அறுக்கப்பட்டுள்ளமை என்பது திட்டமிட்ட செயல் என சந்தேகம் எழுந்துள்ளன, இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.