விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலை மருத்துவ பீடக் கட்டிடம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டிடத்தில் இன்றைய தினம் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.