யாழில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பு!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கூடத்தில் வழங்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் குறித்த சேமிப்புக்கூடத்தில் வழங்க முடியுமெனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.