கலேவெல பிரதேசத்தில் விபத்து : யுவதி உயிரிழப்பு!

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவெல நகரில், தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதுண்டதோடு, தார் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்துடனும் மோதியுள்ளது.

தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதி தூக்கி வீசப்பட்டு தார் ஏற்றிச் சென்ற வானத்தின் டயரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இதில் படுகாயமடைந்த தாய், தந்தை மற்றும் அவர்களின் இன்னொரு மகள் தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிறிபுர பகுதியைச் சேர்ந்த லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 19 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இன்று இவரது 20 ஆவது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.