பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!
பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கை மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை தெற்கில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் ஒருவராவார்.
இவர், தன்வசம் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை