கொழும்பு மாவட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம்…

கொழும்பு மாநகர சபையும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நடாத்திய இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் கொழும்பு 5 மயூரா பிளேஸில் அதிகளவான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வானது அனுபவம் பெற்ற வைத்தியர்கள் மற்றும் தாதியர்களோடு இலங்கை செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு வைத்திய பரிசோதனைகளையும் வைத்திய ஆலோசனைகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தனர்.

இதன் போது இரத்தச் சர்க்கரை பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருந்துகள் வழங்குதல், உடல் குறியீட்டெண் பரிசோதனை போன்றவனற்றோடு நோயாளிகளுக்கான அனைத்து மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் வைத்திய முகாமிற்கு பிரதான ஒழுங்கு அமைப்புகளைச் செய்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜி. விஷ்ணுகாந்த்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பல வைத்திய முகாம்களை கொழும்பு மாவட்டத்தில் நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.