ஆறு கிலோ கஞ்சாவுடன் இருவர் வென்னப்புவவில் வைத்து கைது!
வான் ஒன்றில் 06 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு பேரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் 42 மற்றும் 27 வயதுடையவர்கள் என்பதுடன் அவர்கள் இருவரையும் மாரவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை