பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் திருடப்பட்ட 15 குளிரூட்டிகளுடன் மூவர் மாளிகாவத்தையில் கைது!

 

கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்ட குளிரூட்டிகள் மற்றும் உதிரிப்பாகங்களை திருடும் மூவரடங்கிய குழுவொன்று கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 15 குளிரூட்டிகள், அவற்றைக் கழற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஓட்டோ மற்றும் 10 கிராம் ஹெரோயின் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாளிகாவத்தை பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மாளிகாவத்தை பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் குளிரூட்டிகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.