கொட்டாவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி !

கொட்டாவை – அத்துருகிரிய அதிவேக வீதியின் 3 ஆவது மைல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.

எம்பிலிபிட்டிய, செவனகல, பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து அவர் விபத்திற்குள்ளான லொறியில் ஏறியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதுடன், பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கடுவெலயிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த லொறி, அத்துருகிரிய 3 ஆவது மைல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.