ஓமானில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பெண் தொடர்பில் பெற்றோர் கூறுவது என்ன?

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த 39 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனமடுவ குமாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கூறுகையில், அவர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு மன வலிமை அற்றவர் அல்லர்.

மேலும், இந்தப் பெண் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றினால் சுற்றுலா வீசாவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்து இந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி ஓமானுக்கு வேலைக்குச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.