கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர்.

இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து 04 டிங்கி படகுகள், சுமார் 1670 கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இது குறித்த மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.