வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கல்

வவுனியாவில் 66 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள வவுனியா மாவட்ட வீடமைப்பு அலுவலகத்தின் கீழ் வாழும் மூவினங்களையும் சேர்ந்த 66 குடும்பங்களுக்கு அவர்களது வீட்டுக்கான உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜிவ் சூரியராச்சி, உபதலைவர் லக்ஸ்மன் குணவர்த்தன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர், வீடமைப்பு திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.