“இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இன்று காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னிலை அதிதி ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி மகராஜ்(பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ),பிரதம அதிதி திரு.சிந்தக்க அபேவிக்ரம (அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்), கௌரவ அதிதிகள் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் எஸ்.எல்.எம். ஹனீபா,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜனாப் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் மேலும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. சோ. ஸுரநுதன், சம்மாந்துறை உதவி கல்விப் பணிப்பாளர் திரு. பூ. பரமதயாளன், சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.ரி. சகாதேவராஜா, திரு.சி. சிவராஜா, அம்பாரை மவட்ட கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேலும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.