திருவாசக மாநாடு 2023

அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில்
2023.12.15 வெள்ளி முதல் 2023.12.17 ஞாயிறு வரை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கலாபூசனம் திரு. தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு இடம் பெறவுள்ளது.

சமய சமூக ஆன்மிக இறை ஆசி கிடைக்க வேண்டும் என்னும் நோக்குடன் இந்தியாவில் இருந்து சூரியநார் கோவில் ஆதின தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகளின் வருகையை ஒட்டி இந்து ஸ்வயம் சேவக சங்கமும் ஆலயங்களும் மற்றும் இந்து சமய அமைப்புக்களும் இணைந்து நடார்த்தும் திருவாசக மாநாட்டிற்க்கு அனைவரும் கலந்து இறை அருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

நிகழ்வுகள்

1ம் நாள் நிகழ்வு 2023.12.15 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரை “மணிவாசகப் பெருமானும் திருவாசகமும்’ எனும் தலைப்பில் செயல் அமர்வு நடைபெறும்.

2ம் நாள் நிகழ்வு 2023.12.16 சனிக்கிழமை காலை 08.00 மணிமுதல் பிற்பகல் 12.00 மணிவரை “திருவாசகம் ஓதுதலும் பொருள் கூறலும்” எனும் தலைப்பிலான செயல்அமர்வு நடைபெறும்.

3ம் நாள் : நிகழ்வு 2023.12.17 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.30 ஆரம்பித்து பிற்பகல் 2.00 மணிவரை நிறைவுபெறும். மேலும்
தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமியின் அருளுரை
மாநாட்டின் திருவாசக நூல் வெளியீடு.
மாநாட்டின் நிறைவை தொடர்ந்து உருத்திராட்சம் அணிவித்து தீட்சை வழங்கும் நிகழ்வும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது இன் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றனர் ஏற்பாட்டு குழுவினர்.
02/12/2023 இன்று பி. ப 3.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.