‘ஒற்றைத் தந்த’ யானை மீது துப்பாக்கிச் சூடு!

ஒற்றைத் தந்த யானை மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நாமல் பூங்காவில் சுற்றித் திரிந்த யானையின் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யானை தொடர்பில் கல்கிரியாகம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவின் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று யானைக்கு சிகிச்சை அளித்துள்ளது.

இந்த சிகிச்சையின்போது யானையின் முன் இடது காலின் கீழ்ப் பகுதி மற்றும் உடலில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு தடயங்கள் காணப்படுகின்றன என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.