பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் வகையில் சபைக்கு அந்த நாட்டு சால்வை அணிந்துவந்த எம்.பிக்கள்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முஸ்லிம் எம்.பிக்கள் இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்து சபைக்கு வந்திருந்தனர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன்பாNது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்திருந்தனர்.

அத்துடன் விவாதத்தில் கலந்துகொண்டு ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில் –

பலஸ்தீன் மக்களுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த சால்வையை அணிந்திருக்கிறோம். அங்கு யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரைக்கும் எமது ஆதரவை வெளிப்படுத்தி வருவோம். – என்றார்.

ரிஷாத் பதியுதீன் குறிப்பிடுகையில் –

இஸ்ரேல் அரசாங்கம் காஸா மீது  மேற்கொண்டு வரும் மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதேநேரம் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்குத் தொழிலாளர்களை அனுப்பி, அரபு நாடுகளின் வெறுப்பை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளக்கூடாது. அரபு நாடுகள் எப்போதும் எமக்கு உதவி வருகின்றதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. – என்றார்.

அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர் திலான் பெரேராவும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பலஸ்தீன் ஆதரவு சால்வை அணிந்திருந்தார். யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரை இந்த சால்வையை அணிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் அவர் வெள்ளிக்கிழமையும் இந்த சால்வை அணிந்து வந்து, இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என்ற பிரேரணை ஒன்றையும் முன்வைத்தார்.

மேலும், விவாதத்தில் கலந்துகொண்டிருந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், சபையில் இருந்த அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான சால்வை அணிந்திருக்கவும் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.