பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தமிழர்கள் இலங்கையில் கைதாகினர்! அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை

தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்குகிழக்கில் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் தமி;ழ் மக்கள் நினைவுகூரலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு குழப்புவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின்  உறுப்பினர் பில்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களினதும் சிவில் மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு நான் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் வடக்குகிழக்கில் தங்களுடைய அமைதியான நினைவுகூரல்களின் போது தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த கைதுகள் தமிழர்களின் நினைவுகூறல்களை தடுக்க முயலும் இலங்கை பொலிஸாரின் வரலாற்றின் தொடர்ச்சியே என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.