எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணிலை தோற்கடிக்கோம் பிரசன்ன திட்டவட்டம்

எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த பெருந்தலைவராகவே ரணில் விக்ரமசிங்கவை ஆளும்கட்சியினர் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கச் சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றனர் என்றும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர்களது இந்த சதித் திட்டம் வெற்றியளிக்காது என்றும் வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து அரசை தவிக்கும் அவர்களது சதி முயற்சிக்கு மொட்டுக் கட்சி இடமளிக்காது என்றும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.