அரசுடன் இனிமேல் பேச்சு கிடையாது!  ஹரிணி கூறுகிறார்

பெண்கள் மீதான பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதிகாரிகளை மகிழ்விப்பதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர், நிராயுதபாணியான அமைதியான முறையில் போராடியவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளார் எனக் குற்றம் சாட்டினார்.

வரவு செலவுத் திட்டத்தில் சிறுவர், மகளிர் விவகார அமைச்சின் கொடுப்பனவு 51 வீதத்தால் குறைந்துள்ளது என்றும் அதனால் போஷாக்கு, சுகாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போதைய அரசாங்கத்துடன் இனிமேலும் பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்றும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.