சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு யாழில் விஷேட நிகழ்வுகள்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு, புலர் அறக்கட்டளையின்  ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில்  வலிமேற்கு பிரதேச செயலர் திருமதி.கவிதா உதயகுமார், வட்டுக்கோட்டை பிரதேச வைத்திய அதிகாரி திரு.சி.செந்தூரன், ஓய்வுநிலை பெரதேனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் தி.ஆனந்தமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாற்றுத் திறனாளிகளுக்கு, புலர் அறக்கட்டளையின் வெளிநாட்டு, உள்நாட்டு கருணை உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலைகள், போர்வைகள், மழைக் கவசங்கள் என்பன  வழங்கி வைக்கப்பட்டன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.