யாழ். பல்கலை விஞ்ஞான பிரிவால் மாபெரும் நடை பவனி நடந்தது!

யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடைபவனி பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, பலாலி வீதி ஊடாகச் சென்று  பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டு விஞ்ஞான அலகின் பழைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உட்படப் பலர் பங்கேற்றிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.