மட்டு. கொக்குவிலில் சவப்பெட்டியுடன் மாபெரும் போராட்டம் நடத்திய மக்கள்!

கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சிறுவனின் பிரேதப்பெட்டியுடன் ஊர்வலமாக வந்த மக்கள் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரேதப் பெட்டியை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ‘பொலிஸார் முறையான பாதுகாப்பு வழங்காதமையே  சிறுவன் உயிரிழந்தமைக்குக்  காரணம் ‘ என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.