இந்தியாவிலிருந்து யாழிற்கு நேரடியாக சீனி இறக்குமதி! அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘280 ரூபாவிற்கு மேற்படாது விற்பனை செய்ய வேண்டும் அதற்கு மேலதிகமாக விற்பனை இடம்பெறாத வகையில் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவம் உண்டு. சங்கங்களுக்கு கிடைக்கும் சீனியை மொத்த வியாபாரமாக இடம்பெற்றது. அவ்வாறு இடம்பெறாது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு கப்பலும் வருவதற்கான பேச்சுக்களும் இடம்பெறுகிறது.

பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பலும் வரும். அதன் போது சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளிலும், தட்டுப்பாட்டிலும் மாற்றம் ஏற்படும்.

தைப்பொங்கலுடன் சரக்கு கப்பலும் வரும். இதுவரை காலி, கொழும்பு பகுதியில் பொருள்கள் இறக்கப்பட்டு இங்கு கொண்டு வரும்போது அதிக செலவு ஏற்படும்.

தற்போது, யாழ்ப்பாணத்திற்கு சரக்கு கப்பல் வந்தால் செலவு குறைந்து விலையில் மாற்றப்படும். அவை கூட்டுறவு சங்கங்கள் ஊடாகவே மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. – எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.