நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் வீடு செல்வேண்டும் ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறல்

சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

குடியகல்வுத் திணைக்களம் ஊடாக அனைத்து திருடர்களையும் நாங்கள் பிடித்தோம். இந்தத் திணைக்களத்தையே வலுப்படுத்த வேண்டும்.

குடியகவல்வு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். வழக்கு தொடரவும், தண்டனை வழங்கவும் பதவி நீக்கம் செய்யவும் குடியகல்வு திணைக்களத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

விளையாட்டு துறையில் காணப்படும் மோசடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு 2018 ஆம் ஆண்லிருந்து நீதி அமைச்சுக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால் எந்தவித முறைப்பாட்டிற்கும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஊழல் மோசடிகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரம் இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நிதி அமைச்சும் பொறுப்புக் கூற வேண்டும்.

தான் சம்பாதித்தவைகளை நாட்டுக்கு கொடுக்கும் அரசியல்வாதி மற்றும் திரைசேரியை வீட்டுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியல்வாதியே இந்த நாட்டுக்குத் வேண்டும்.

சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்.

இந்த 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.