மன்னார் பிரீமியரில் வெற்றிவாகை சூடியது அயிலன் எவ்.சி. அணி !

மன்னார் பிரீமியர் லீக் தொடரின்  போட்டி   ஞாயிற்றுக்கிழமை மாலை – மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஏ.கே.ஆர்.எவ்.சி. அணிக்கும் அயிலன் எவ்.சி. அணிக்கும் இடையே இடம்பெற்ற இப்போட்டியில் அயிலன் எவ்.சி. அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியது.

முதல் நிலையை பெற்றுக்கொண்ட அணிக்கு 10 லட்சம் ரூபாவும், 2 ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட அணிக்கு 5 லட்சம் ரூபாவும் பணப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கான நிதி அனுசரணையை சிறி சபா ரத்தினம் அறக்கட்டளை வழங்கியது.

இந்தப் போட்டியில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.