அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால்செய்யும் அதிகாரம் கிடையாது! ஜனாதிபதிக்கு ஜி.எல்.பீரிஸ் இடித்துரைப்பு

அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்கு முக்கிய பங்கு இருந்தாலும் அது தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதிக்கும் அரசமைப்பு சபைக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.