கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

ஈழத்து சபரிமலை’ என அழைக்கப்படும் யாழ். கோண்டாவில் சபரீச ஐயப்பன் ஆலயத்தின்  வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  அந்தவகையில் தொடர்ந்து பத்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக நடைபெறவுள்ளன.

இதனையடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை இரவு 07 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு 07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.