சர்வதேச நீர் மாநாடு – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
சர்வதேச நீர் மாநாடு எதிவரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடம் நீர்க் கட்டணத்திற்கு என்ன நடக்கும் என ஊகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளித்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த,
நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும், நீரை பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுவதாவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, அதற்காக சூத்திரம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.












கருத்துக்களேதுமில்லை