சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் அதன் ஐந்தாம் நாளான இன்று(வெள்ளிக்கிழமை)கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலய மாணவர்களுக்கு டெங்குநோயிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் அஜந்தன் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ், மாவட்ட ஆளுநரின் ஆலோசகரும் சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளருமான லயன் சி.ஹரிகரன், சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான – பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை சுன்னாகம் மயிலணி மகாவித்தியாலயத்திலும், செவ்வாய்க்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் புதன்கிழமை உடுவில் மகளிர் கல்லூரியிலும் வியாழக்கிழமை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அத்துடன், மாணவர்களின் சிரமதானப் பணியும் இடம்பெற்றதுடன், சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரால் தொடர்ந்து 5 நாள்கள் பாடசாலைகளில் இந்தக் கருத்தமர்வை மேற்கொண்டமைக்காகப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.