உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன், நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்குமாக இருந்தால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குள் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் கண்டி மல்வத்து மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டனர்.

நாட்டில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு, அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பான யோசனைகளையும் இதன்போது இந்தக் குழுவினர் மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தனர்.

மேலும், நாட்டு மக்கள் அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய வகையிலான யோசனைகளை உள்ளடக்கிய இலங்கையைப் பற்றிய இமயமலைப் பிரகடனம் தொடர்பாகவும் இவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.