ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்! ஜனகரத்நாயக்க அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவேன் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள்  தலைவர் ஜனக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜானகரத்நாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதை உறுதி செய்துள்ளார்.

சனிக்கிழமை மின்துண்டிப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  நிச்சயமாக வெற்றிபெறுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிசெம்பர் ஏழாம் திகதி எனது பிறந்த தினத்தன்று நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டேன். நான் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் அது மாத்திரமன்றி நான் நிச்சயமாக வெற்றிபெறுவேன் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.