தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 3டி மாடலிங் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம்!

 

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3டி மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அதிநவீன 3டி பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் அண்மையில் வழங்கிவைத்துள்ளது.

குறித்த கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆர். கே. றிபாய் காரியப்பர்,  ரிஐஓஏ இன் பிரதிநிதிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரிஐஓஏ பிரதி நிதிகள் ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் ரிஐஓஏ நிறுவனத்திற்கும் இடையேயான இந்த கூட்டு முயற்சி, இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்த உபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், சவால்களைத் தீர்க்கவும் உதவும்.

இந்தக் கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், இலங்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. – இவ்வாறு தெரிவித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.