வெள்ளையடிப்பு செய்த உலக தமிழர் பேரவை! கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு

சிங்கள பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றில் கையொப்பமிட்டதை அடுத்து உலகத் தமிழ் பேரவையுடனான சந்திப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது.

மாவீரர் நினைவேந்தலின் போது அரசாங்கம் மக்கள் மீது மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை கட்டவிழ்த்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்த பின்னணியில், அரசாங்கத்திடம் பிரகடனத்தை கையளித்தமை வெள்ளையடிப்பு செயற்பாடு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாகத் தாயகத்தில் உலகத் தமிழ் பேரவை எவருடனும் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.