வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவராவார்.

இவர் டுபாயிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை  3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய  சோதனை நடவடிக்கையில் 22 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 114 சிகரெட்டு பெட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.