மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்! இரா. சாணக்கியன் வலியுறுத்தல்

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அதில் ஒரு பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை நீங்கள் துரிதப்படுத்தித் தரவேண்டும்.

அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஒரு காணியை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். அதே போல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஒரு பகுதியை அவ் ஊர் மக்கள் மலசலம் அமைப்பதக்காகக் கேட்கின்றார்கள்.

இவற்றையும் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.

நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இந்தக் காணிகளை மக்களுக்கு கையளிக்கக் கூடியதாக மற்றும் விடுவிக்கக் கூடிய வகையில் காணப்படும் என்பதை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.