‘கெத்சமனே கொஸ்பல் சபையில்’ நத்தார் தினக் கொண்டாட்டம்!

நத்தார் தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு அப்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு, மட்டக்குளியில் உள்ள கெத்சமனே கொஸ்பல் சபையில் நடைபெற்றது.

ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகனின் ஆலோசனைக்கு அமைவாக இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஜனனம் அறக்கட்டளையின் பணிப்பாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்கலாநிதி வணபிதா சந்ரு பெர்னாண்டோ சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு, வருகை தந்திருந்த கிறிஸ்தவ மதப்போதகர்களுக்கு அன்பளிப்பு வவுச்சர்களை வழங்கி வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.