அடுத்தவரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வாவே சமர்பிப்பாராம் சஜித் பிரேமதாஸ ஆரூடம்

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இதில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை யார் முன்வைப்பது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதனை முன்வைப்பர் என்றும் அதில் தனது கொள்கையை வெளிப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.