கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தி. புலமைப்பரிசில் மாணவன் கௌரவிப்பு!

 

கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் 7 வருடங்களுக்குப் பின்னர் தரம் – 5 புலமைப் பரிசிலில் அகிலன் ஆகாஷ் என்ற மாணவன் 175 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவனுக்கு பல்வேறு அமைப்புக்களின் உதவிக்கரத்தில் மிகப் பிரமாண்டமான கௌரவிப்பு நிகழ்வும் ஒளி விழாவும் இன்று (வியாழக்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திருமதி சைலினி பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக் கல்வி அலுவலக ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் முரளிதரனும், சிறப்புவிருந்தினராக பங்குத் தந்தை திருச்செல்வம் அடிகளாரும் கௌரவ விருந்தினராக சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர்களான ஊடகவியலாளர் லயன் சி.ஹரிகரன், தொழிலதிபர் லயன் க.டினேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் சைக்கிள் ஒன்றும், சுன்னாகம் லயன்ஸ் கழகம், கிருபா லேனேர்ஸ், சித்திவிநாயகர் புத்தகசோலை, ஸ்தாபகர் குடும்பம், ஹரே கிருஸ்ணா ஆலயம், கூட்டுறவு இன்சூரன்ஸ் ஆகியோரால் நிதியுதவி மற்றும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.