அரசியல் கைதிகளுக்காகப் புலம்பெயர் அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்! குரலற்றவர்களின் குரல் கோமகன் தெரிவிப்பு
‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்’ என குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்காக புலம்பெயர் அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியைச் சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை