பற்றியெரிந்த வர்த்தக நிலையம்; யாழ்.மீசாலையில் துயரசம்பவம்!

 

யாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் புதள்கிpழமை ஏற்பட்ட தீ விபத்தால் பெறுமதியான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினையடுத்து அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.