தேசபந்து தென்னகோன் உட்பட 4 அதிகாரிகளை நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளை இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து 2 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாகச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான விசராணையின்போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, மனுதாரருக்கு 100,000 ரூபா இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

மனுதாரரன டபிள்யூ. ரஞ்சித் சுமங்கல என்பவரை சட்டவிரோதமாக கைது செய்து, தடுத்துவைத்து, சித்திரவதைக்கு உட்படுத்தியதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளையே இவ்வாறு நஷ்டஈடு வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அஜித் வனசுந்தர (இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர்) என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

மேலும், தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.