சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு குப்பை சேகரிக்கும் வாழிகள் வழங்கல்! சுன்னாகம் லயன்ஸ் கழக அனுசரணையில்

 

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் டெங்கு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலைகளிலும் நடைபெற்று வருகின்றது.

இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சி.கார்த்தீபன், அஜந்தன் ஆகியோர் நிகழ்த்தி வருகின்றனர்.

அவர்களின் இந்தச் செயற்பாட்டின் மேலும் ஒரு பகுதியாக வலிகாமம் வலயத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கழிவுகளைத் தரம்பிரித்து இடுவதற்கு மூன்று வெள்வேறு வர்;ணங்களைக் கொண்ட குப்பை வாளிகள் வழங்கப்பட்டன.

அதன் ஒரு செயற்பாடாக சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முதல்;வர் லயன் மு.செல்வஸ்தானிடம் சுன்னாகம் லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் சசீந்திரராஜாவின் அனுசரணையில் மூன்று குப்பை வாளிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழகச் செயலாளர் லயன் சி.ஹரிகரன், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஸ், மாவட்டத் தலைவர் லயன் தே.அகிலன், கழக உறுப்பினர் லயன் சுகுமார், லயன் விஜிந்தக் ஆகியோர் பங்குகொண்டு வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.