மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் ஆய்வு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியான கனகசபாபதி வாசுதேவா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் வயது பாலினம் ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்றில் தெரிவித்தார்.

மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வப் பணிகளின்போது இதுவரை 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.