சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் கடுமையாக பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளே சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 54 குடும்பங்களை சேர்ந்த 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 340 குடும்பங்களை சேர்ந்த 1048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.