ஷானி அபேசேகரவுக்கு  உடன் போதிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்; எனக் கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு உடனடியாக போதிய பாதுகாப்பை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதுகாப்புத் துறையினருக்கு  உத்தரவிட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தமக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் துறையினருக்கு  உத்தரவு பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.