நுவரெலியாவில் உணவகத்தில் தீ!

நுவரெலியா பிரதான நகர், லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீப்பரவலால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.

எனினும், உணவகத்தின் சமையல் அறையில்  காணப்பட்ட பொருள்கள் பல தீயில் கருகிவிட்டன.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.