நானு ஓயாவில் சொகுசுக் கார் விபத்து: மயிரிழையில் பிழைத்த கணவன், மனைவி

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி சனிக்கிழமை காலை  விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன், மனைவி எனவும் இருவரும் மயிரிழையில் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு  நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில்  சென்ற சொகுசு கார் அதே வழியில் சென்ற வாகனம் ஒன்றில் ஓயில் சிந்தி காணப்பட்டமையினாலும் சீரற்ற காலநிலை காரணமாகவும் மிகவும் செங்குத்தான இவ்வீதில் ஓயில் வழுக்கியமையால் குறித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.